இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. |
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபது-20, ஐந்து ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றது.
இதில் இருபது-20 போட்டி மழையால் இரத்தானது. ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி முதல் நாளிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றது.
இதில் மெக்கலம் 68, பிளைன் 53, ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 5, ஹேரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து தனல் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி இரண்டாவது நாளான நேற்று 80.2 ஓவர்களிர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணியில் அபாரமாக பந்து வீசிய ஹேரத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 93 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 93 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஹேரத் தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment